உங்கள் கூடையில் சேர்க்கப்படவில்லை!
மகாபாரதம் எழுதப்பட்ட காலம் மிகவும் காட்டுமிராண்டிக் காலம் நீதி, ஒழுக்கம், கற்பு, அஹிம்சை என்பன பற்றிய கவலையற்ற காலம். அது ஒரு கற்பனை கதை.பார்ப்பனீயத்தைக் கொல்லைப்புற வழியில் புகுத்துவதற்கே 'கீதை' உருவாக்கப்பட்டது என்ற உண்மைகளை ஆதாரப்பூர்வமாகத் தரும் நூல்.
மக்களை இழிவுப் படுத்தி, ஒற்றுமையைக் குலைக்கும் ஜாதியை, ஜாதி தர்மத்தை - வர்ணதர்மத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும் உருவாக்கப்பட்டதுதான் கீதை.பெண்களை இழிவுபடுத்தும் நூல் கீதை. தேசப்பிதா என வர்ணிக்கப்பட்ட காந்தியாரை பலிவாங்கிய கீதை என அடுக்கடுக்கான ஆதாரங்களைத் தரும் நூல்.
கீதை புனிதநூல் அல்ல, என நிறுவும் 'கீதையின் மறுபக்கம்' அய்யா தந்தை பெரியாரின் பணி முடித்த புரட்சி நூல். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களைக் கொண்டநூல் கீதையின் மறுபக்கம்!
1,50,000 பிரதிநிகளுக்குமேல் தொடர்ந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் நூல். விறுவிறுப்பாக படிக்கும் விதத்தில் பல்வேறு தகவல்களை எளிய நடையில் விவரிக்கும் நூல்.
ஆன்மீகம் (Spritualism) என்று எதோ புதுவழிகாட்டப் புறப்பட்டவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் நவீன சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கும் நூல்.
நீதி, ஒழுக்கம், சமத்துவம், மனித நேயம் மலர 'கீதையின் மறுபக்கம்' படியுங்கள்.
2 கருத்துகளை / கருத்துகளை பதிவு செய்க