• மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்

இந்நூலிலிருந்து  (பக்கம்-13) 

           ”மனிதன் உலகத் தோற்றத்திற்கும் , நட்பிற்கும், சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில், கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக்  கொள்வதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவதும் சகஜம் என்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறோம். இந்த முறையிலேதான் கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விஷயங்கள் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (சயின்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு, அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விசயங்களை ‘மனிதன் செயல்’ என்று சொல்ல தைரியம் கொண்டுவிட்டார்கள்.  உதாரணமாக கம்பி இல்லாத தந்தி ஏற்படுத்தி இருக்கும் விசயமும் அது எப்படி செய்யப்படுகிறது என்கின்ற சயின்ஸ் உணர்ச்சியும் நமக்கு புரியாமல் இருக்குமானால், நாம் இன்னமும் அதை ஒரு ‘தெய்வீக சக்தி’ என்றும், பழைய காலத்து ரிஷிகள்  பேசிக் கொண்டிருந்ததாய்ச் சொல்லப்படும் “ஞான திருஷ்டிச் சம்பாசனை” என்றுமே சொல்லித் தீருவோம். ஆதலால், மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர, கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம்.”

                                                                                                                                                                               - தந்தை பெரியார்

புத்தகம்
நூல் ஆசிரியர் தந்தை பெரியார்
பொருள் தத்துவம்
வெளியிட்ட ஆண்டு முதல் பதிப்பு- 1933
பதிப்பு பனிரெண்டாம் பதிப்பு-2016
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 64

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

மெட்டீரியலிசம் அல்லது பொருள்முதல்வாதம்

  • ₹40