இன்றைக்குள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் சில நூற்றாண்டுகால அறிவியலாளர்களின் முயற்சியின் விளைவாகும். ஆனால், இந்துத்வா பேர்வழிகள், இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இந்து மதமே அடிப்படை என்கின்றனர். வானூர்தி, உறுப்பு மாற்று அறுவை, குளோனிங் போன்ற எல்லாவற்றிற்கும் எங்கள் இந்துமதமே முன்னோடி என்கின்றனர். எனவே, இந்து மதம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையா? என்று அலசி ஆராய வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு அலசி ஆராய்ந்து அறிந்த உண்மைகளை மக்களுக்குச் சொல்ல வேண்டியதும் கட்டாயமாகிறது. எனவே, இந்நூல் வெளிவர வேண்டியது உடனடி தேவையாகவும் உள்ளது.

நமது மக்களுக்குள்ள பெரிய குறை பக்தியின் பேரால் எதைச் சொன்னாலும் நம்புவது. இந்த குறைபாட்டை நன்கு அறிந்த ஆரியர்கள், கடவுளோடு தொடர்புப்படுத்தி கணக்கில்லா கற்பனைக் கதைகளை, புராணங்களாக எழுதினார்கள்.

இதன் மூலம் அவர்களுக்கு இரட்டிப்புப் பலன் கிடைத்தது. ஒன்று மக்கள் சிந்தனையற்ற மடையரானார்கள். இரண்டு பக்தி உணர்வு பொங்கிப் பெருகியது. இவை இரண்டும் அவர்களின் ஆதிக்கத்திற்கும், வருவாய்க்கும், உயர்விற்கும், பெருந்துணையாய் அமைந்தன. ஆக, ஆரிய பார்ப்பனர்களின் தன்னலத்திற்காகப் புனையப்பட்ட புராணக் கதைகள். அப்படிப்பட்ட கதைகளில் வரும் அறிவிற்கு ஒவ்வாத மூடக்கருத்துகளுக்கு, இன்றைய இந்துத்துவாவாதிகள் அறிவியல் முலாம் பூசி அறிவியலாக்க முயற்சி செய்கின்றனர்.

உயர்நிலையில், உள்ள, பொறுப்பு வாய்ந்த அமைச்சர் பதவியில் இருக்ககூடியவர்களே மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுத்து, அறிவியல் மாநாடுகளிலே இவ்வாறு பேசும் அவலம் அரங்கேறத் தொடங்கிவிட்டது.

எனவேதான், மனித நலத்தில் அறிவு வளார்ச்சியில் அக்கறையுள்ள நாம் இவர்களின் மோசடிப் பிரச்சாரங்களை ஆதாரங்களோடு தகர்த்து, உண்மையை விளக்கி, மக்களுக்கு அறிவும், விழிப்பும் ஊட்ட வேண்டியது கட்டாயமாகிறது.

அதனடிப்படையில், இந்துமதப் புராணங்களை அதிக அளவு ஆய்வு செய்து, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் இந்நூலைப் படித்து தெளிவுபெற வேண்டும். இந்துத்துவா மூட வலைகளிலிருந்து; விலகிவரவேண்டும், விழிப்புடன் அறிவுடன் வாழவேண்டும்.

மக்களை மடமை கருத்துகள் கவ்வாமல் தடுத்து, அறிவு வழி நிற்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியநூல் இது.

அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே வளர்க்கவேண்டியது, ஒவ்வொரு குடிமகரின் கடமை. என்று அரசியல் சாசனமே வலியுறுத்திக் கூறுகிறது. எனவே, படித்துத் தெளிவு பெறுவதோடு, மற்றவர்களும் விழிப்பு பெற விளக்கிக் கூறுங்கள். இது ஒரு தொண்டறப்பணி! மானுடம் காக்கும் பணி!
புத்தகம்
நூல் ஆசிரியர் மஞ்சை வசந்தன்
வெளியிட்ட ஆண்டு 2022
பதிப்பு முதல் பதிப்பு
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 160

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?

  • ₹140


Tags: அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?