மகாபாரதம் எழுதப்பட்ட காலம் மிகவும் காட்டுமிராண்டிக் காலம் நீதி, ஒழுக்கம், கற்பு, அஹிம்சை என்பன பற்றிய கவலையற்ற காலம். அது ஒரு கற்பனை கதை.பார்ப்பனீயத்தைக் கொல்லைப்புற வழியில் புகுத்துவதற்கே ‘கீதை’ உருவாக்கப்பட்டது என்ற உண்மைகளை ஆதாரப்பூர்வமாகத் தரும் நூல்.
மக்களை இழிவுப் படுத்தி, ஒற்றுமையைக் குலைக்கும் ஜாதியை, ஜாதி தர்மத்தை – வர்ணதர்மத்தைப் பாதுகாக்கவும், பரப்பவும் உருவாக்கப்பட்டதுதான் கீதை.பெண்களை இழிவுபடுத்தும் நூல் கீதை. தேசப்பிதா என வர்ணிக்கப்பட்ட காந்தியாரை பலிவாங்கிய கீதை என அடுக்கடுக்கான ஆதாரங்களைத் தரும் நூல்.
கீதை புனிதநூல் அல்ல, என நிறுவும் ‘கீதையின் மறுபக்கம்’ அய்யா தந்தை பெரியாரின் பணி முடித்த புரட்சி நூல். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து திரட்டப்பட்ட ஆதாரங்களைக் கொண்டநூல் கீதையின் மறுபக்கம்!
1,50,000 பிரதிநிகளுக்குமேல் தொடர்ந்து விற்பனையாகிக் கொண்டிருக்கும் நூல். விறுவிறுப்பாக படிக்கும் விதத்தில் பல்வேறு தகவல்களை எளிய நடையில் விவரிக்கும் நூல்.
ஆன்மீகம் (Spritualism) என்று எதோ புதுவழிகாட்டப் புறப்பட்டவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொள்ளும் நவீன சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கும் நூல்.
நீதி, ஒழுக்கம், சமத்துவம், மனித நேயம் மலர ‘கீதையின் மறுபக்கம்’ படியுங்கள்.
Boomi Nathan –
இந்த புத்தகம் 89 புத்தகங்களுக்கு மேல் ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம் இது வரை 1 லட்சிம் பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்தது இந்த புத்தகத்தில் இருந்து ஒரு வரியைக்கூட மறுக்க முடியதாது மேலும் பத்ம புராணக் கதைகள் ஆத்மா போன்ற பகுதிகள் புதிதாக இணைக்கபப்ட்டுள்ளன.
உழைக்க முன் வாருங்கள் பலனைப்பற்றிக் கவலைப்டாதீர் கிட்டிடும் பலனையும் எட்டி உதைத்திடுவீர் என்கிற கீதோபதேசம் எவ்வளவு தவறானது.
முன்னேற்றத்தின் தாய் எது என்றால் சில பலன்களை விளைவுகளை விஞ்ஞானத்தில் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற ஆசையும் பலன் கருதிய உழைப்பும் தானே அவை இல்லாவிட்டால் வேளாண்மை அலையிலிருந்து தொழில் வளர்ச்சி அலைக்கு வளர்ச்சி அடைந்து 20ம் நுற்றாண்டில் மின்னனு அலையால் வளர்ச்சி அடைந்து நொடியில் உலகத்தின் மற்றோரு போடிக்கு தவகல் தொழில் நுட்பம் சென்றையும் போது கீதையின் கர்மயோகத்தை அறிவியலாளர் பின்பற்றியிருந்தால் இத்தகைய முன்னேற்றத்தைக் கண்டிருக்க இயலுமா என்கிறார் புத்தக ஆசிரியர்
LAKSHMIPATHI –
The expression straight from the face of the stanzas definitely gives you a confirmation of your findings. But human folks need some consolation in the midst of several challenges in life. One cannot always think that he will rotate like a wheel in a cart. If at any point of time he is depressed due to an unexpected failure in his venture in pursuit of achieving his goal need a mental consolation to keep up his spirit. It is thus becoming a psychological medicine for his mind, body and intellect. I hope I am clear. I need a copy of this book for my library.