முனைவர் மயில்சாமி அண்ணாதுரை
“நிலாத் தமிழர்” என்று அன்புடன் அழைக்கப்படும் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை, ஜூலை 2, 1958, கோதாவாடி, கோவை மாவட்டம், தமிழ்நாட்டில் பிறந்தவர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) மைய இயக்குநர், தேசிய ஆராய்ச்சி மற்றும் கட்டுமான அமைப்பின் தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவர் உட்பட பல பதவிகளை வகித்தவர்.
சந்திரயான், மங்கள்யான் உட்பட அறுபது இந்திய செயற்கைக் கோள்களின் பணி மற்றும் கட்டுமானத்தில் பங்காற்றியவர்.
பிறந்த தனது சொந்த கிராமத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து, 1980 இல் அரசு பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூரில் பொறியியல் இளநிலைப் பட்டம் பெற்றார். 1982ல் பூ. சா.கோ தொழில்நுட்பக் கல்லூரி கோயம்புத்தூரில் முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பல பல்கலைக்கழகங்களில் இருந்து மதிப்புறு பட்டங்களையும், பத்மஸ்ரீ உட்பட பல தேசிய, மாநில மற்றும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இதுவரை தமிழில் ஏழு புத்தகங்களை எழுதியுள்ளார்.
பெயர்: https://www.mylswamyannadurai.in/
Reviews
There are no reviews yet.