“நான் அய்யாவுடன் சேர்ந்தபோது இப்போது எனக்கு என்ன வயதோ, அந்த வயது அய்யாவுக்கு. அப்போதே வயிற்றுக் கோளாறு; பேதியாகும்; பொருட்படுத்தமாட்டார். அப்போதே அய்யா இறந்து போயிருப்பார்; ஆனால் மணியம்மை வந்த பிறகுதான், அவருக்கு இதிலே ஒரு திருப்பம். மணியம்மையார் அய்யாவை நன்றாகக் கவனித்துக்கொண்டார். மணியம்மையார் இல்லை என்றால் நாம் அய்யாவை எப்போதோ பறி கொடுத்துவிட்டுப் பரிதவித்திருப்போம். இவ்வளவு நாள் உயிரோடு பார்த்திருக்க முடியாது. அய்யா எவ்வளவு நாள் இன்னும் வாழ்கிறாரோ அவ்வளவுக்கும் நமக்கு நல்லது.”
– அறிஞர் அண்ணா (பக்கம் 36)
பெரியார் செத்துக்கொண்டிருந்தார்; தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று, அவரின் பொதுத் தொண்டு; மக்கள் மீது அவர் வைத்த அருள் மற்றொன்று.
ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போலப் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்றும் முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலனேந்திக் காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை அன்னையென்று புகழாமல் வேறு என்னவென்று புகழவல்லோம்?
-புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (பக்கம் 43)
Reviews
There are no reviews yet.