ஆரியர்களின் வருகைக்கு முந்தைய இந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களின் வாழ்வியல், பொருளியல், அரசியல், பண்பாடுகள் பற்றி ஆதாரத்துடன் விவரிக்கும் நூல்.
இந்திய நாடு முழுமையிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர்
இதுவரையிலும், அகழ்வாராய்ச்சியினால் அறியப்பட்ட பழைய நாகரிகங்களுள், இந்திய நாகரிகமே மிகப் பழமை உடையது. சிந்துவெளி நாகரிகத்தின் காலம், கி.மு. 3500 என்று சொல்லப்படுகின்றது. சிந்துவெளி நாகரிகக் காலத்தில் இந்தியா முழுமையிலும் ஒரேமொழியை வழங்கிய ஒரே இனமக்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் திராவிடர் எனப்படுவர். ஆரிய மக்கள் கி.மு.இரண்டாயிரத்தில் அல்லது அதற்குப்பின் இந்திய நாட்டை அடைந்தார்கள். அக்காலத்தில் வடநாடு முழுமையிலும் திராவிட மொழி வழங்கியதென்பதற்குச் சான்று ஆரிய மக்களின் பழைய பாடல்களாகிய வேதங்களில் திராவிடச் சொற்கள் பல இருப்பதும் பிறவுமென ஆராய்ச்சியாளர் நன்கு ஆய்ந்து நிறுவி உள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.