மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள் கடுமையாக உழைத்து ‘நீதிக் கட்சியும் சமூக நீதியும் என்னும் இப்புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார். நீதிக் கட்சியின் தோற்றம், டி.எம்.நாயரின் அறிவுத்திறம், உழைப்பு, தொண்டு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பில் நீதிக்கட்சி ஆற்றிய பணிகள், சமூக நீதியை நிலைநிறுத்திய விதம், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றிய சமூக நீதிச் சட்டங்கள் எல்லாவற்றையும் வளமான நடையில் விளக்கியிருக்கிறார்.
நீதிக்கட்சி நூறு ஆண்டுகளுக்கு முன் பிறப்பித்த புரட்சிகரமான சட்டங்களை, வடமாநிலங்கள் இப்போதுதான் தயங்கித் தயங்கிச் செயல் படுத்துகின்றன என்பதை வாசகர்கள் அறியும்போது நீதிக் கட்சியின் புரட்சி மனப்பான்மையைத் தெளிவாக உணர்வார்கள்.
தந்தை பெரியாரின் கொள்கைகள் தாமதமானாலும் நிச்சயம் வெல்லும் என்பதை இப்புத்தகத்தை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். நீதிக்கட்சியின் வரலாற்றையும் சாதனைகளையும் அறிந்துகொள்ள உதவும் இப்புத்தகம் அறிவுச் சுரங்கமாகவும் திகழ்கிறது; அறிவாயுதமாகவும் ஒளிர்கிறது.
-கி.வீரமணி
Reviews
There are no reviews yet.