தோழர் ராமசாமிக்கு இந்தத் தீர்ப்பு கிடைத்ததுபற்றி வெகு சந்தோஷம். ஆனால், தண்டனைப்பற்றி மட்டும் அவருக்குக் கொஞ்சம் வருத்தம். யாருக்குத்தானிருக்காது? சும்மா, காட்டில் மரத்துக்கு மரம் பறந்து கிளைக்குக் கிளை தாவி- நினைத்த நேரங்களில் பாடித் திரிந்த பறவையைப் பிடித்து கூட்டுக்குள் போட்டு அடைப்பதுபோல் அறைக்குள்ளிட்டு அடைத்தால் எந்த மனிதன் தான் வருத்தப்படமாட்டான்?
தோழர் ராமசாமிக்கு அந்த முறையிலா வருத்தம்? அல்லவே அல்ல. ‘பொசுக்கென்று ஆறுமாதம் கிடைத்தது. அதிகமாகக் கிடைக்கமென்று நம்பி இருந்தார். ஆனால், அது ஏமாற்றத்தில் முடித்தது. அதனால்தான் அவருக்குக் கொஞ்சம் வருத்தம் இருக்கலாம். நான் மட்டிலுமல்ல. மற்ற எத்தனையோ தோழர்கள் ரெண்டுவருஷம் வரை ராமசாமியை வெளியில் பார்க்க முடியாதென்று பேசிக்கொண்டிருந்தோம். ஆனால், ஆறுமாதம் என்றதும் எல்லோருக்கும் வியப்பு.
-மணவை திருமலைச்சாமி
பார்ப்பான் நீதிபதியாய். ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் அடிபட வேண்டியதுதான்.
-தந்தை பெரியார்

தீ பரவட்டும்
இனிவரும் உலகம் (விரிவாக்கப்பட்ட பதிப்பு)
இந்தியக் குடிசை 




Reviews
There are no reviews yet.