- அறிவுத் துறையில் போட்டி அதிகமாக இருக்கும் இக்காலத்தில், தேர்வுகளில் தேறுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. எங்களால் புரிந்துகொள்ள முடியாதது என்னவெனில், ஆங்கிலம் படித்த சிறுபான்மையான ஒரு வகுப்பினர் மட்டும் அரசாங்க அலுவல்களில் உயர்ந்தது. தாழ்ந்தது ஆகிய எல்லாவற்றையும் ஏகபோகமாக உரிமையாக்கிக்கொண்டு. பெரும்பான்மை வகுப்பினர்களில் படித்த ஒரு சிலருக்குக்கூட இடங்கொடுக்காமல் இருந்து வருவதேயாகும். அவர்கள் எல்லாத் தகுதியும், பண்பாடும் பெற்றிருந்தும், அவர்கட்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.
- எத்தனையோ இடையூறுகள் இருந்தும், நீதித் துறையில் கல்வித் துறையில், வழக்கறிஞர் தொழிலில், மருத்துவம், பொறியியல் முதலான துறைகளில், பெரிய சமீன்களை ஆட்சி நடத்துவதில் பார்ப்பனரல்லாதார் பலர் மிகச் சிறப்புடன் விளங்கி வருகின்றனர்.
- அவர்களில் சிலருக்கு இணையாக பார்ப்பன வகுப்பில் ஒருவரையுங் கூற முடியாத அளவு அவர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். தன் உரிமையை உணர்ந்து சுயமரியாதையுடன் அவர்கள் ஒன்று சேர்த்து முயற்சி செய்திருப்பார்களேயாயின் இன்று அரசாங்க அலுவல்களில், அவர்களின் பிறப்புரிமையாகிய முதலிடத்தைப் பெற்றிருப்பார்கள். தங்களுக்கென்று ஒரு சங்கம் இல்லாததாலும், தங்களுடைய கருத்துக்களை வெளியிடப் பத்திரிகை இல்லாததாலும் எல்லோரும் தங்கள் தங்கள் உரிமையைத் தெரிந்து கொள்ள முடியாமற் போயிற்று!
நீதிக்கட்சி – பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை (டிசம்பர் 1916)
₹40.00
Weight | 200 g |
---|---|
Dimensions | 240 × 140 × 1 cm |
வெளியிட்ட ஆண்டு | |
பதிப்பு | |
கட்டமைப்பு | |
மொழி | |
பக்கங்கள் |
SKU: BOOK
Categories: சமூகநீதி, தமிழ், பிறர் படைப்புகள்
Brand: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
Reviews
There are no reviews yet.