Parpanar Puratukub Pathiladi! - பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! - Striking Back at Brahmin Propaganda! (Tamil Book)
பார்ப்பன எழுத்தாளர்கள் பலர் பரப்பி வரும் அவதூறுகளுக்குப் பதிலடி
பார்ப்பனர்கள் – திராவிடர் இயக்கத்தையும், தந்தை பெரியார் அவர்களையும் அவர்தம் அணுக்கத் தொண்டர்களையும் பற்றி தங்கள் மனம் போன போக்கில், உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்து திட்டமிட்டே எப்படி முன்பு திராவிடப் பேரரசர்களை “அசுரர்கள்” “அரக்கர்கள்” என்றும் திராவிடர் இனத்தையே கொச்சைப்படுத்தி, “தஸ்யூக்கள், தாசர்கள்” “சூத்திரர்கள்”. “மிலேச்சர்கள்” என்றும் தமது புராண இதிகாசங்களில் எழுதி வைத்து மிகப்பெரும்பாலோரை நம்ப வைத்து, மூளைச்சாயம் ஏற்றினார்களோ அதைப் போலவே தற்காலத்திலும் தங்களிடம் கிடைத்த சில பார்ப்பன ஏடுகள் மூலமும், நுனிப் புல் மேய்ந்த பார்ப்பன எழுத்தாளர்களைக் கொண்டும் ஏதோ பெரிய ஆராய்ச்சிகள் செய்து எழுதுவது போன்ற ஒரு “பிரமை” “மாயை”களை உண்டாக்கி எழுதிவருகின்றனர்.
-ஆசிரியர் கி.வீரமணி
தமிழ்நாட்டு காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஜாதி அபிமானம்
தமிழர்களின் சமையல்கூடம் மற்றவர்களின் சமையல் கூடத்திற்குத் தொலைவில் தனியாக இருந்தது. தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் பார்த்துவிட்டால்கூடத் தோஷம் என்று தமிழ்ப் பிரதிநிதிகள் கருதினார்கள். எனவே, அவர்களுக்கு என்று தனியான சமையல்கூடத்தை கல்லூரி மைதானத்தில் அமைந்திருந்தார்கள். நாற்புறமும் தட்டி வைத்து இந்தக் கூடம் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரே புகை; யாரையும் மூச்சுத் திணறச் செய்துவிடும். சமைப்பது. சாப்பிடுவது. கையலம்புவது எல்லாம் அதற்குள்ளேதான். திறப்பே இல்லாத இரும்புப் பெட்டிபோல் இருந்தது அந்த இடம். இது வருண தருமத்தின் சீர்கேடாகவே எனக்குத் தோன்றிற்று. காங்கிரசின் பிரதிநிதிகளுக்குள்ளே இத்தகைய தீண்டாமை இருந்து வருகிறதென்றால். இவர்கள் யாருக்கு பிரதிநிதிகள் என்று வந்திருக்கிறார்களோ அந்த மக்களிடம் தீண்டாமை இன்னும் எவ்வளவு மோசமாக இருந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை எண்ணியதும் பெருமூச்சுவிட்டேன்.
(1901 ஆம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாடு பற்றி காந்தியார் தமது சுயசரிதையில்…)




Reviews
There are no reviews yet.