தந்தை பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ ‘விடுதலை’ ஏடுகளில் டாக்டர் அம்பேத்கர் பற்றிய செய்திகள், குறிப்புகள், அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் தந்தை பெரியாரின் உரைகள்.
• டாக்டர் அம்பேத்கரின் தமிழில் வெளியான முதல் நூலான ‘ஜாதியை ஒழிக்க வழி எனும் நூலை வெளியிட்ட பதிப்பாளர் தந்தை பெரியார் அவர்களே!
• 1927 முதல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பற்றிய செய்திகளை தமிழில் வெளியிட்ட இதழாளர் தந்தை பெரியார் அவர்களே!
• 1935 இல் டாக்டர் அம்பேத்கர் இந்து மதத்தைச் சாடிய போது இந்தியாவில் டாக்டர் அம்பேத்கரை ஆதரித்த ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்களே….
• 1940 ஆம் ஆண்டு பம்பாயில் தந்தை பெரியார் டாக்டர் அம்பேத்கர் முகமது அலி ஜின்னா ஆகியோரின் சந்திப்புகள் பற்றிய முழுவிவரங்கள். வகுப்புரிமைக்காக தந்தை பெரியார் நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்த மசோதாவை தாக்கல் செய்து நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய உரை..
• 1944 இல் சென்னை வந்த டாக்டர் அம்பேத்கர் பார்ப்பனரல்லாத தலைவர்களுக்கு வழங்கிய அறிவுரை
• டாக்டர் அம்பேத்கரைப் பற்றிய தந்தை பெரியாரின் உரைகள் ஆகியவற்றின் தொகுப்பாக வரலாற்றுப் பொக்கிஷமாக ஆய்வாளர்களுக்கான ஆவணமாக வெளிவந்துள்ளது.
Reviews
There are no reviews yet.