தந்தை பெரியார் , அறிஞர் அண்ணா ஆகியோரின் சுயமரியாதைத் திருமண விளக்க பேருரைகள் மற்றும் முக்கிய இணைப்புகளுடன்
இயற்கையாய் நடைபெற்றுவரும் சுயமரியாதைத் திருமணம்
சுயமரியாதைத் திருமணம் என்றாலும், தமிழர் திருமணம் என்றாலும், சீர்திருத்தத் திருமணம் என்றாலும் அவைகளைத் திருமண மக்களைவிட மேல் ஜாதிக்காரன், மேல் வகுப்புக்காரன் என்கிற ஒருவன் நடத்தவோ, மரியாதைப் பெறவோ திருமணத்தில் கலக்க விடக்கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி வருகிறேன். இரண்டாவது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும், தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலோ, மதத்தின் பேராலோ, ஜாதி வகுப்பின் பேராலோ, மற்றெதின் பேராலோ நடத்தப்படக்கூடாது என்கின்றேன். இவை தவிர, மற்ற சீர்திருத்தங்கள் அனேகம், இப்போது தானாகவே யாருடைய வலியுறுத்தலும் இல்லாமல் இயற்கையாக நடைபெற்று வருவதைப் பார்க்கிறோம்.
– தந்தை பெரியார், பக்கம்: 139
குடும்பக் கட்டுப்பாடும் சுயமரியாதைத் திருமணமும்!
இந்தியாவின் மக்கள் தொகை பிரச்சினை தான் மிகப் பெரிய வளர்ச்சிக்கான முட்டுக்கட்டைப் பிரச்சினையாக இருந்து வருகிறது. எத்தனை ஆயிரம் கோடிகள் செலவிட்டு ஒன்பது அய்ந்தாண்டு திட்டங்களை நிறைவேற்றினாலும், பெருகி வரும் மக்கள் தொகை (Malthus theory of population) மிகப் பெரிய அளவில் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும், மகளிர் உரிமை வளர்ச்சிக்கும் இடையூறாக உள்ளதால், தந்தை பெரியார் அவர்கள் கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ‘கர்ப்ப ஆட்சி’ என்பதை குடும்பக் கட்டுப்பாட்டை தனது “குடிஅரசு” வார ஏட்டின் மூலம் பரப்பியதோடு ‘கர்ப்ப ஆட்சி அல்லது பிள்ளைப் பேற்றை அடக்கி ஆளுதல்’ நூல்களைப் பாமர மக்களிடையேயும் படித்த மக்களிடையேயும் பிரச்சாரம் மூலம் பரவச் செய்ததோடு, ஒவ்வொரு சுயமரியாதைத் திருமணத்தின் போதும், குடும்பத்தில் ‘வசவசவென’ பிள்ளைகளைப் பெறாதீர் என்று அறிவுரை கூறத் தவறியதே இல்லை.
பக்கம்: 54
Reviews
There are no reviews yet.