சுயமரியாதை இயக்கத்தின் வேலை
ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகின்றதோ அவைகளையெல்லாம் மாற்று வதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமாகுமே தவிர, அரசனுக்குப் பதிலாகப் பார்ப்டானை ஏற்றி வைப்பதும். பார்ப்பானுக்குப் பதிலாக பணக்காரனைப் பட்டத்தில் வைப்பதும் ஒரு நாளும் சுயமரியாதை ஆகாது. இவையெல்லாம் சுயநல மரியாதையேயாகும்.
நமக்கும் நமது வாழ்விற்கும் எதிரியாக இருக்கிற எவ்வளவு பெரிய கடவுளானாலும், எத்தனை பெரிய தத்துவ ஞானத்தைக் கொண்டிருந்தாலும், அவைகளைப் பூண்டோடு ஒழித்துக் கட்டுவதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முன்னணி வேலையாகும்.
புரிந்து கொள்ள முடியாத வேதாந்த விசாரணைகளில் ஒளிந்து கொண்டிருக்கிற கடவுளைப் புரிந்து கொள்ளுகிற எளிய நடைக்குக் கொண்டு வருவதுதான் சுயமரியாதை இயக்கத்தின் வேலை.
Reviews
There are no reviews yet.