Pengal Munnaerrathirgu Thanthai Periyar Seythathu Enna? - பெண்கள் முன்னேற்றத்திற்கு தந்தை பெரியார் செய்தது என்ன? - What Did Thanthai Periyar Do for Women's Progress? (Tamil Book)
குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் கொடுமைகளை விளக்கி 1926 ஆம் ஆண்டே ‘குடிஅரசு’ ஏட்டில் தொடர்ந்து எழுதினார். குழந்தைத் திருமணத்தின் 5 வயதுக்கும் குறைவான சிறுமிகள் ஆயிரக்கணக்கில் காரணமாக விதவைகளாயிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.
பெண்களின் கைகளில் உள்ள கரண்டிகளைப் பிடிங்கிவிட்டு புத்தகங்களைக் கொடுக்கவேண்டும் என்றார். அது பேனாவாகி, காவல்துறை பெண்களின் கையில் துப்பாக்கியாக இருக்க தந்தை பெரியாரே காரணம்.
பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமான சொத்துரிமையும், வாரிசு பாத்தியதையும் கொடுக்கப்பட வேண்டும் என்று 1929, 1930, 1931 ஆகிய ஆண்டுகளில் நடந்த மாகாண சுயமரியாதை மாநாடுகளில் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றியதுடன், இது குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.
திருமணம்,விவாகரத்து, கல்வி, சொத்து, கற்பு, ஒழுக்கம். தொழில், அரசியல் முதலிய எந்தத் துறையானாலும் ஆண்களுக்கு உள்ள சகல உரிமைகளும் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார். (தூத்துக்குடி 1931)
1909ஆம் ஆண்டிலேயே தம் குடும்பத்தில் சிறு, வயதில் திருமணம் செய்துவைக்கப்பட்டு விதவையான தன் தங்கை மகள் அம்மாயிக்கு மறுமணம் செய்து வைத்தார்.
கர்ப்பத்தடையைப் பெண்களின் உடல் நலன் சார்ந்து மருத்துவர்கள் பரிந்துரைத்துக் கூறிய கருத்துகளைப் புத்தகமாக வெளியிடும் போது, பெண்கள் உடல் நலம் மட்டுமல்லாது அவர்களின் விடுதலைக்கும் இது அவசியம் என்றும் தெரிவித்தார்.
‘எப்படி மனிதன் மனிதனை அடிமை கொள்வதைத் தவறு, சட்டப்படி குற்றமான காரியம்’ என்று ஆக்கியிருக்கின்றோமோ அதுபோல, ஆண்கள் பெண்களைத் திருமணம் என்கிற பெயரால் அடிமையாக்கிக் கொள்வதைச் சட்டப்படியான குற்றம் என்று செய்ய வேண்டும்’ என்று கூறியவர் தந்தை பெரியார்.






Reviews
There are no reviews yet.