வந்தே மாதரம் பாடல் சிறுபான்மையினரை இழிவுபடுத்துவது; மதக்கலவரத்தை தூண்டுவது;
சுபாஸ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர், எம். என். ராய் போன்றவர்களால் நிராகரிக்கப்பட்டது.
‘வந்தே மாதரம்’ பாடலுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
வந்தே மாதரம் பாடலைப் பாட ஆணை போடலாமா? இது அநாகரிகம்; மனிதநேயத்திற்கு விரோதம்; மதம் சார்ந்ததாக நாட்டை அணுகக் கூடாது; மனிதம் சார்ந்த பிரச்சனையாக அரசியலமைப்புச் சட்டப்படி அணுக வேண்டும்.
‘வந்தே மாதரம்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘வந்தே மோதுகிறோம்’ என்று சொல்கிறீர்கள்; மோதலை உருவாக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்; மதக் கலவரங்களை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; இந்தக் கூட்டம் ஒற்றுமையாக இருங்கள் என்று சொல்கின்ற கூட்டம்.
நல்ல மனிதநேயத்தோடு. ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் என்று நினைக்கின்ற யாராக இருந்தாலும், பாசிசத்தை ஒழிக்க வேண்டும்; அது உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது என்று நினைப்பவர்கள் யாராக இருந்தாலும், முன்வரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக. பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரும்பாடுபட்டு, எத்தனையோ சூழ்நிலைகளை எதிர்த்து நின்று. வரையறுத்துக் கொடுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு நாளும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே. அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றியாக வேண்டும்.






Reviews
There are no reviews yet.