Varnashramam - வர்ணாஸ்ரமம் - The Caste System of Varnashrama (Tamil Book)
உண்மையிலேயே சர்.சண்முகம், கலையின் மேம்பாட்டினைச் சுவைக்க, காப்பியக் கடலிலே மூழ்கிடுவதை நான் தடுக்கவில்லை. ஆனால், அக்கடலிலே ஆரிய அலை மோதுகிறது. சனாதனமெனும் சுறாமீன்கள் உலவுகின்றன. வர்ணாசிரமம் எனும் வாயகன்ற திமிங்கலமுளது என்று எச்சரிக்கை செய்யாவிடின் எனக்கு அவர்பால் உள்ள அன்பினை மறந்தவனாவேன். கலையுலகிலே அவர் உலவுவது ஆரியபுரிக்கு அவரை அழைத்துச் செல்லாதிருக்க வேண்டும்.
கலையார்வத்திலே ஈடுபட்டு ‘ஆரியராவது திராவிடராவது’ என்று கூறிடும் முத்துரங்கமாகவோ, ‘இகலோகத்தைப்பற்றி இவ்வளவு கவலைப்பட்டுக் கிடப்பானேன்; பரலோகத்தைப் பற்றியன்றோ சிந்தனை செய்யவேண்டும்’ என்று கூறிடும் பாராயண பக்தராகவோ, மாறிடாதிருக்க வேண்டும்.
–அறிஞர் அண்ணா






Reviews
There are no reviews yet.