இந்நூலில் இருந்து சில துளிகள்…
காலத்தின் முக்கியத்துவத்தை, தனிப் பெருமையான அதன் தனித்துவத்தை தக்க முறையில் உணர்ந்து நடந்து கொண்டால், வாழ்வில் உயர்வு, தானே வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்! உங்களைத் தன் தோள்மீது ஏற்றி வைத்துக் கொண்டாடும் காலத்திற்கு இணை காலமே!
‘அவசர முடிவு’ என்பது வேறு; ‘விரைந்த முடிவு’ என்பது வேறு.இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது என்பது இதன் மூலம் புரிகிறதா?
அவசர முடிவு என்பது கால தாமதமில்லாதது என்றாலும், பல அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்த பின்பு எடுத்த முடிவாகாது. விரைந்த முடிவு என்பது பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, பரிசீலித்து, பிறகு தயக்கத்திற்கு இடம் தராது முடிவு எடுத்துச் செயல் செய்தல்.
நமது எதிரிகளில் மிக மிக ஆபத்தானதும் ஆழமாக ஊறி ஆளுமை புரிவதும் “தன்முனைப்பு” என்ற (Ego) ஒரு குணமேயாகும்! புகழ்ச்சி என்ற எருவை இந்த ஆபத்தான விஷச் செடிக்குப் போட காரியம் சாதிக்கும் பலரும் தாராளமாக முன் வருவர்!
-கி.வீரமணி
Reviews
There are no reviews yet.