”தோல்வியுற்றதே கிடையாது”
“இதுவரை நானோ, சுயமரியாதை இயக்கமோ, திராவிடர் கழகமோ துவக்கிய எந்தப் போராட்டத்திலும் அல்லது கொள்கையிலும் தோல்வியுற்றதே கிடையாது என்பதைப் பல முறை எடுத்துக்காட்டி இருக்கிறேன். கோவில் நுழைவு முதல், பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை வரையிலும்; இரயில்வே சிற்றுண்டி விடுதிகள் முதல் சாதாரண ஒட்டல்களிலும் – ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடாதென்பதிலும்; தாய்மார்களை ஆண்டவன் பேரால் பொட்டுக் கட்டும் அநாகரிகம் ஒழிய வேண்டுமென்பது வரை – நாங்கள் கிளர்ச்சி செய்து சிறை சென்று பல தொல்லைகளுக்கு உட்பட்டு வெற்றி பெற்று அது நடைமுறையிலும், ஒன்றிலும் தோல்வி கிடையாது. இன்னும் விரைவில் கூறப்போகிறேன் – கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை விட்டது மட்டும் போதாது; அவர்களே பூஜை செய்ய வேண்டும்; தட்சணைக் காசுகளை அவர்களே அடைய வேண்டும்; அப்படி அனுமதிக்காத சாமிகளை உடைத்து ரோட்டுக்கு ஜல்லி போட வேண்டுமென்று கிளர்ச்சி செய்யத்தான் போகிறேன்” – – – தந்தை பெரியார் விடுதலை – 22.08.1948
Reviews
There are no reviews yet.