Muthalamaichargalin Dravidap Piragadananggal! - முதலமைச்சர்களின் திராவிடப் பிரகடனங்கள்! - Chief Ministers' Dravidian Declarations! (Tamil Book)
“தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இல்லாத நேரத்தில், எனக்கு ஆறுதலாக இருப்பவர் ஆசிரியர் வீரமணி” என்று தலைவர் குறிப்பிட்டார். என்னைப் பொறுத்தவரையில், இவர்களோடு. தலைவர் கலைஞர் அவர்கள் இல்லாத நேரத்தில், கொள்கை வழிகாட்டியாக இருப்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான் எனக்கு.
அதனால்தான், நான் போகவேண்டிய பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டு இருக்கிறேன். இதைத்தான் நேற்றும் சொன்னேன் – இன்றைக்கும் சொல்கிறேன் -நாளைக்கும் சொல்வேன்.
“தி.க.வும் தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி” என்று அறிஞர் அண்ணா சொன்னார். “தி.க.வும், தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்” என்று கலைஞர் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரையில், “தி.க.வும், தி.மு.க. வும் உயிரும், உணர்வும்போல.” உயிரும், உணர்வும் இணைந்து உடல் இயங்குவதைப்போல, நாம் இந்த இனத்தின் உயர்வுக்காகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் (தஞ்சை 6.10.2023)






Reviews
There are no reviews yet.